ஓட்டமாவடி சிராஜிய்யா கிரிக்கெட் அணியின் 5வது சீருடை அறிமுகப்போட்டி   08.10.2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் ஓட்டமாவடி சிராஜிய்யா கிரிக்கெட் அணியும் கல்குடா யங் ஸ்டார் கிரிக்கெட் அணியும் விளையாடின. 20 ஓவர்கள் கொண்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிராஜிய்யா அணி 17 ஓவர்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
109 ஓட்ட இலக்குடன் களமிறங்கிய கல்குடா யங் ஸ்டார் அணி 14.5 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று எட்டு விக்கட்டுக்களால் வெற்றி ஈட்டிக்கொண்டது. ஆட்டநாயகனாக கல்குடா யங் ஸ்டார் அணித்தலைவர் முஹம்மது சதாம் தெரிவானார்.
ஆட்டநாயகன் விருதினை எம்.நியாஸ் மொளலவி வழங்கி வைக்க வெற்றி பெற்ற அணிக்கான விருதினை நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட ஓட்டமாவடி மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.நெளபர் வழங்கி வைத்தார்.
சீருடை அறிமுகப்போட்டிக்கு கல்குடா யங் ஸ்டார் அணியை நட்பு ரீதியாக விளையாட அழைத்தமைக்கு கழகத்தில் சார்பில் சிராஜிய்யா அணிக்கு அதன் தலைவர் முஹம்மது சதாம் நன்றி தெரிவித்தார்.
இதில் அணிகளின் வீரர்கள், விளையாட்டு ரசிகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.