போது மக்களுக்கான கடிதங்களை பதுக்கிவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த பொகவந்தலாவை உப தபால் நிலைய உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ உப தபால் நிலையத்தில், கொட்டியாகலை பகுதிக்குதபால் விநியோகஸ்தராக பணிபுரிந்து வந்த இவர் மக்களுக்கான கடிதங்களை உரியவர்களுக்கு வழங்காமல் தமது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரது வீட்டில் சட்டவிரோதமான புகையிலை தூள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே ஒரு தொகை கடிதங்களும் இதன் போது மீட்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவை – சதீஷ்.