கடுகண்ணாவை – ஒரு யாத்திரை குறிப்பு திரைப்படத்தில் இலங்கை கலைஞரான ஷியா உல் ஹசன் நடித்துள்ளார். இந்திய பிரபல நடிகரான மம்மூட்டியுடனான திரைப்படத்தில், கடுகண்ணாவை – ஒரு யாத்திரை குறிப்பு திரைப்படத்தில் படப்பிடிப்புக்கள் கடந்த சில தினங்களாக இலங்கையில் இடம்பெற்றிருந்தன.

ரஞ்ஜித் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகின்றது.
இந்த திரைப்படத்தை, இலங்கையில் படிப்பிடிப்புக்களை நடத்துவதற்கு ஐங்கரன் மீடியா சோலிசன் பிரைவட் லிமிட்டட் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இலங்கை கலைஞரான ஷியா உல் ஹசன் நடித்துள்ளார்.

கடுகண்ணாவை – ஒரு யாத்திரை குறிப்பு திரைப்படம் விரைவில், நெட்பிலிக்ஷ் இணைய வழி செயலி ஊடாக வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.