அக்கரபத்தனை பிரதேச சபையின் புதிய தலைவராக ராமன் கோபாலகிருஸ்ணன் நியமிக்கப்படவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் சுப்ரமணியம் கதிர்சசெல்வன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இ.தொ.க பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்றைய தினம் கொட்டக்கலை சி.எல்.எப் இல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது கதிர்ச்செல்வனை உடனடியாக பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு அறிவித்த நிலையில் இன்றைய தினம் கதிர்ச்செல்வன் தனது இராஜினாமா கடிதத்தினை கையளித்துள்ளார்.

இந்நிலையில், அவரது வெற்றிடத்துக்கு இ.தொ.க அக்கரபத்தனை பிரதேச சபையின் உறுப்பினராக இருக்கும் ராமன் கோபால கிருஸ்ணனை நியமிக்க உள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.