கதிரையில் இருந்து கீழே விழுந்து ஒரு வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையை கதிரையில் இருத்தி விட்டு பெற்றோர், சமையலறையில் இருந்துள்ள நிலையில், குழந்தை கதிரையிலிருந்து தவறி விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடனடியாக குழந்தை, முழங்காவில் பிரதேச வைத்தியசாலைக்கு, கொண்டு செல்லப்பட்ட போது, வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.