கத்தார் சிங்கப் பெண்கள் அமைப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா

0
53
 

கத்தார் சிங்கப் பெண்கள் அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை (30.05.2024) கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றது.

கௌரவ அதிதியாக முன்னாள் ஐசிசி தலைவி மிலன் அருண் மேலும் விசேட அதிதியாக டாக்டர்  ஜெரின் ரோஸ் மற்றும் திருக்குறள் ஆய்வாளர் ரங்கநாயகி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் StandUp comedy, பட்டிமன்றம், பாடல், நடனம், Fashion Show என பல் சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் அதிதிகள்,அமைப்பின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் நிகழ்வில் கத்தாரில் உள்ள முக்கிய பிரமுகர், அமைப்பின் பெண் உறுப்பினர்கள் என பலரும் கலந்து  சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here