கத்தி குத்துக்குள்ளான வங்கி முகாமையாளர் ஆபத்தான நிலையில்

0
261

பிபிலைப் பகுதி கூட்டுறவு வங்கியொன்றின் பெண் முகாமையாளர் இனந் தெரியாத நபரொருவரின் கத்திக் குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் பிபிலை அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பிபிலைப் பகுதியைச் சேர்ந்த ஹெவல்வெல கூட்டுறவு வங்கியின் முகாமையாளரான வசத்தி நிலூசியா ஆரியவன்ச என்பவரேஇ கத்திக் குத்திற்குழக்காகியுள்ளவராவார்.

நேற்று வெள்ளிக்கிழமை,  குறிப்பிட்ட பெண் முகாமையாளர் கடமையிலிருக்கும் போது முகமூடியணிந்த நபரொருவர் வங்கிக்குள் நுழைந்து,  கத்தியொன்றினால் முகாமையாளரின் மார்புப் பகுதியில் குத்திவிட்டு, தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக அம் முகாமையாளர் பிபிலை அரச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்துஇ பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையென்றும்இ விரைவில் அந் நபர் கைது செய்யப்படுவாரென்று பிபிலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.கே. செனரத் தெரிவித்தார்.

 

பதுளை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here