கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா, படபொத பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரே உயிரிழந்தள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே இவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.