கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எச்சரிக்கை

0
165

பிரசவ்வலி உச்சமடையும் வரையில் காத்திருக்க வேண்டாம் என மகப்பேற்று மருத்துவ நிபுணர்கள் கோரியுள்ளனர்.

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சினை காரணமாக கர்ப்பிணித்தாய்மார்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்றபட்டுள்ளமையினாலேயே இவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பிரச்சினையினால் தாய் ஒருவர் நேற்றைய தினம் தனது மூன்றாவது குழந்தையை வீட்டிலேயே பிரசவித்த சம்பவமொன்று நிக்கவரட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

எனவே பிரசவவலி ஏற்படும் அறிகுறிகள் தென்படும்போதே வைத்தியசாலையில் சேர்வதற்கு கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here