வீதியோரம் நடந்து சென்றுக்கொண்டிருந்த கர்ப்பிணிப்பெண் மற்றும் அவரது கணவன் மீது வேனொன்று மோதி விபத்தக்குள்ளானதில் இருவரும் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

புத்தள – வெல்லவாய வீதியில் புத்தல புருத சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
32 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணும் அவரது 37 வயது கணவரும் வீதியோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த வேனொன்று அவர்கள் மீது மோதியதனாலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த தம்பதியினர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் புத்தல குடாஓயாவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் எனவும் விபத்தை அடுத்து வேனின் சாரதி தப்பிச் சென்ற போதிலும் தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டுநரின் இடது கால் துண்டிக்கப்பட்டு செயற்கை காலுடன் இருந்த நிலையிலேயே வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வருகிறது.