காகத்தினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்ட சம்பவமொன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது. ஐந்து நாட்களுக்குப் பின்னர் கடந்த சனிக்கிழமை பிற்பகல் பண்டாரகம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஒரு தொகை பெற்றோல் கிடைத்துள்ளது.

எரிபொருளைப் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்ற பெருமளவான மக்களுக்கு எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட போது அப்பகுதியில் திடீரென வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெடிப்பு சம்பவத்துடன் அப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அருகில் இருந்த மின்மாற்றியில் காகம் ஒன்று மோதியதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

பின்னர், மின்சாரசபை அதிகாரிகள் வந்து சரிசெய்து மின் விநியோகத்தை சீரமைத்தனர். அதன்படி சுமார் அரை மணி நேரம் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.