நோட்டன் அட்டன் பிரதான வீதியின் காசல்ரீ பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அதிகாற்றுடன் கூடிய மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகிலுள்ள காசல்ரீ சந்திக்கருகிலே இன்று காலை 7 மணியளவில்  வீதியோரம் இருந்த பாரிய மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
மரத்தினை வெட்டி அகற்றும் பணியில் காசல்ரீ  முகமிலுள்ள இராணுத்தினர் மற்றும் பிரதேசவாசிகளும் நடவடிக்கை எடுத்துள்ளர்.
மரத்தை வெட்டியகற்றிய பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கிருஸ்ணா