காட்டு யானை தாக்கி 17 வயது மாணவி பலி

0
359

காட்டு யானை தாக்கியதில் பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று    ஹசலக்க பகுதியில்    இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தனது உயிரிழந்த சகோதரனுக்காக தானம் வழங்குவதற்கு ஹசலக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹெயாய பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு சென்று கொண்டிருந்த போது குறித்த சிறுமி யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

இதன்போது பலத்த காயமடைந்த சிறுமி ஹசலக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 17 வயதுடைய கஹெயாய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் ஹசலக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here