குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஹெர பிரதேசத்தில் கான் ஒன்றில் சிக்கி மீட்கப்பட்ட 14 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த குறித்த மாணவன் பாதையின் ஓரத்தில் இருந்த நீர் நிரம்பிய கான் ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு மூடப்பட்ட கானின் பகுதியில் சிக்கியுள்ளார்.

இந் நிலையில், பிரதேசவாசிகள் உடன் இணைந்து பொலிசார் மற்றும் இராணுவத்தினர் பெக்கோ உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களை பயன்படுத்தி மிக சிரமத்திற்கு மத்தியில் குறித்த சிறுவனை மீட்டு குருணாகல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மரணம் சிறுவன் குருநாகல் நகர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்