காற்சட்டைக்குள் கமெராவை மறைத்து வைத்து அதன் மூலம் பெண்களை படம் பிடித்தார் எனக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஸ் நடத்துனராகவும் பணியாற்றியவர் என பிடபெத்தர பொலிஸார் தெரிவித்தனர்.
பிடபெத்தர பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
நீண்ட கால்சட்டையின் கீழ் பகுதியில் சந்தேக நபர் இந்தக் கமெராவை சூட்சுமமாக பொருத்தி, அதன் மூலம் அவர் பெண்களை வீடியோ எடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.