காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் மீண்டும் பதற்றம் -வீடியோ இணைப்பு

0
345

அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட  ‘கோட்டா கோ கம’  எனும் தொனிப்பொருளிலான ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை 50 நாள் நிவைடைந்துள்ள நிலையில், இன்று இரவு மீண்டும் குறித்த பகுதியில் களேபரம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு-கோட்டை பகுதியில் உள்ள உலக வர்த்தக மையத்திற்கு அண்மித்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் கிடைக்கின்றன.

காலி முகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு இன்று காலை பல்வேறு விதமாக ஆர்ப்பாட்டக்காரங்கள் எதிர்ப்புக்களைத் தெரிவித்து ஊர்வலமாக வருகைதந்திருந்த நிலையில், இன்று இரவு குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இவ்வாறு நீர்த்தாரை பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here