காலிமுக திடல் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 12 இல் வசிக்கும் 15 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.

மூன்று சிறுவர்களுடன் நீராடிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் உயிர்காப்புப் படையினரால் சிறுவன் மீட்கப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.