கால்பந்தாட்ட வன்முறை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு

0
252

கால்பந்து போட்டி ஒன்றில் ஏற்பட்ட வன்முறையில் இது வரை 174 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 150 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், இந்தோனேசியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கால்பந்து போட்டித் தொடரின்,  Arema FC மற்றும் Persebaya Surabaya ஆகிய இரு அணிகளுக்கிடையிலான போட்டியில், இரு அணிகளின் இரசிகர்களும் ஆரம்பம் முதலே போட்டிகளை வெறித்தனமாக இரசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர இரசிகர்கள், கடும் கோபமடைந்தனர். இதனையடுத்து மைதானத்துக்குள் குவிந்த இரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.  இச்சந்தர்ப்பத்தில் களத்தில் இருந்த பல அரேமா வீரர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here