இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் உள்ள சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 105 மணி நேரத்திற்கும் மேலாக போராடிய சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

ஜான்கிர் சம்பா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் ராகுல் ஷாகு தவறி விழுந்தான். 60 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் இந்திய இராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.

105 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறுவன் ராகுல் ஷாகு பத்திரமாக மீட்டகப்பட்டான். ராகுல் ஷாகு நல்ல நிலையில் இருப்பதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.