கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம். செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

இதன்போது, ருஹுனு பல்கலைக்கழக பேராசிரியர். விக்கிரம செனவிரத்ன புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டள்ளமையும் குறிப்பிடத்தக்கது.