குரங்கின் நன்றியுணர்வு

0
160

குரங்கு ஒன்று தனக்கு உணவு கொடுத்துவந்த எஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தின் மீது ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன் அவரின் இறுதிக்கிரிகை நடந்த மயானம் வரை சென்று இறுதி  அஞ்சலி செலுத்திய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) தாளங்குடாவில் இடம்பெற்றுள்ளது. மரணக்கிஇயைகளில் கலந்துகொண்ட அனைவரையும் கண்கலங்கவைத்ததுடன் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காட்டில் இருந்து அடிக்கடி வந்து போகும் குரங்கு ஒன்றிற்கு, தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான  பீதாம்பரம் ராஜன் என்பவர் உணவு மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கி வந்துள்ளார். குறித்த குரங்கும் தினமும் அவரது வீட்டிற்கு வந்ததும் அவர் அதற்கு பிஸ்கட் மற்றும்  உணவு வழங்குவதுடன் அவரின் மாற்றுத்திறனாளியான பிள்ளையையும் குறித்த குரங்கு மகிழ்வித்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (17) திகதி இரவு திடீர் சுகயீனம் காரணமாக குறித்த வீட்டின் உரிமையாளர் உயிரிழந்துதையடுத்து அவரின் வீட்டில் இறுதிகிரிகைகள் நேற்று (18) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த வீட்டிற்கு வந்த குரங்கு குறித்த எஜமானார் சடலமாக இருப்பதை பார்த்து அவரின் பக்கம் சென்று அவருக்கு மூச்சு உள்ளதா என சோதித்து அவரின் கழுத்து சட்டையை பிடித்து இழுத்து பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மரணித்தவர் படுக்கையில் இருந்து எழும்பாததையடுத்து குரங்கு கண்ணீர் விட்டு அழுததுடன் அவரின் காலை தொட்டு கும்பிட்டு அவரின் அருகில் தொடர்ந்து அமர்ந்திருந்துள்ளது. கிரியைகளுக்கு வந்தவர்களின் மனத்தையும் குறித்த சம்பவம் கவலையடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here