‘குறிக்கோளுடைய இளம் தலைமுறை’ குறும்படப் போட்டி

0
79

மக்கள் கலையரங்கு நடத்தும் முன்னாள் ஆயர் கலாநிதி ஜோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை   விருதுக்கான குறும்பட போட்டி இடம்பெறவுள்ளது. ‘குறிக்கோளுடைய இளம் தலைமுறை’ எனும்  தலைப்பிலேயே போட்டிகள் இடம் பெற உள்ளது .

போட்டிக்கான விதிமுறைகள்

தலைப்பிற்கு ஏற்றவாறு குறுந்திரைப்படம் அமைந்திருத்தல் வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் வாழ்விடமாகக்  கொண்டவர்களே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

ஒரு போட்டியாளர் எத்தனை குறும்படங்களையும் அனுப்ப முடியும்.

குறும்படம் 20 நிமிடங்களுக்கு உட்பட்டதாக அமைந்ததாக இருக்கும் குறும்படம் 2023 -2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

போட்டிக்கு அனுப்பப்பட்டு பரிசு பெற்ற படமாக அமைதல் கூடாது. நிறுவனம் அல்லது தனிநபர் தயாரிப்பு செய்திருந்தால் அவர்களுடைய அனுமதி கடிதம் அனுப்பி வைத்தல் வேண்டும்.

பிரபல்யமான இயக்குனர்கள் நடுவர் குழாம் மூலமே போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

முதலாம் பரிசு 50,000 ரூபாவாகவும் இரண்டாவது பரிசு 40 ஆயிரம் ரூபாவாகவும மூன்றாவது பரிசு 30 ஆயிரம் ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் ஜுன் மாதம் 25 ஆம் ஆம் திகதி   விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்பப்படும் கநற்திரைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படாத படமாக இருத்தல் வேண்டும். பதிவு கட்டணமாக ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தி அந்த பற்றுச்சீட்டை  0774-687069 எனும் வட்சப் இலக்கத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுள்கொள்ப்படுகின்றது.

விண்ணப்பங்களை https://forms.gle/DJcZxgJXdjF1ZfTM7  எனும் தொடுப்பின் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here