வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி குளத்தில் வீழ்ந்து உயிரிழந்தள்ளதாகத் தெரியவருகிறது.

பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகெலே காட்டின் மேல் பகுதியில நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 3 வயது குழந்தையே உயிரிழந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மடுல்லக்கலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.