குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்த சம்பவமொன்று யாழ். பருத்தித்துறை லிசக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த சூசைப்பிள்ளை சகாயராசா (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த முதியவர் நேற்று திங்கட்கிழமை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, சடுதியாக குளவிகள் இவரை கொட்டிய நிலையில், மயக்கமடைந்த அவரை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் பலனளிக்கவில்லை.