லக்சபான தோட்ட எமில்டன் பிரிவில் 18 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டு இருந்த வேளையில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் தோட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலதிக சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.