குளவி கொட்டியதில் 25 மாணவர்கள் வைத்தியசாலையில்

0
212

கிளிநொச்சி மகா வித்தியாலயம் நேற்று செவ்வாய்கிழமை நிறைவுபெறும் நேரத்தில் குளவி கூடு கலைந்தமையால் 25 மாணவர்களை குளவி கொட்டியதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடு கலைந்துள்ளமையால் பாடசாலை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில் பல மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த நேரத்தில் மாணவர்கள் பதற்றத்துக்குள்ளாகியதோடு, சில மாணவிகள் குளவி கொட்டுக்கு உள்ளாகி மயக்கமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் விடுதிகளுக்கு அனுப்பபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here