பொகவந்தலாவை பொகவானை தோட்டத்தில் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 8 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் 17.06.2022 வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணியளவில்
இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. மரத்திலிருந்த குளவி கூடு கலைந்து
வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள்
தெரிவித்தனர்.

காயங்களுக்கு உள்ளான 8 பெண் தொழிலாளர்களும் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் குறித்து அச்சமடையத் தேவையில்லை என
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வை.எல்.பி. பஸ்நாயக்க தெரிவித்தார்

பொகவந்தலாவை  எஸ். சதீஷ்.