புசல்லாவையில், குளிக்கச் சென்று காணாமல் போன 16 வயதான சிறுவன் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடகம, அமுனுவல நீர்வீழ்ச்சியில் தனது நண்பருடன் நேற்று திங்கட்கிழமை மாலை குளிக்கச்சென்றிருந்த சிறுவன் நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கம்பளை – நவோதவிட்ட பகுதியை சேர்ந்த சிறுவனொருவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.