பிறந்த குழந்தையை வைத்தியசாலையில் இருந்து வீட்டிற்கு கொண்டு சென்ற பின்னர், வைத்தியசாலையில் இருந்ததைப் போலவே குழந்தை நன்றாக பாலை உறிஞ்சி குடிக்கின்றதா?

குழந்தையின் உடல் மஞ்சள் நிறமாக மாறுகின்றதா? சிறுநீர் மற்றும் மலம் என்பன நல்ல முறையில் வெளியேறுகின்றனவா? என்பன குறித்து உன்னிப்பாக அவதானித்து ஏதேனும் வித்தியாசங்கள் இருக்குமிடத்து அவ்வாறான குழந்தைகளை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என்று குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஆபத்தான காரணிகளை புறக்கணிப்பது, குழந்தையின் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.