நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, டெஸ்போட் பகுதியில் வீடொன்றில் இருந்து கேஸ்; சிலிண்டர் திருடப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பசுமலை பகுதியில் இருந்து டெஸ்போட் பகுதிக்கு உறவினராக வருகை தந்தவர் இன்று (27) காலை தனி வீடு ஒன்றில் இருந்து வெற்று காஸ் சிலிண்டர் ஒன்றினை திருடி நானுஓயா கிரிமிட்டிய பிரதான நகரில் விற்பனை செய்ய முற்பட்ட போது பிரதேச மக்களும், இளைஞர்கள் மடக்கி பிடித்துள்ளார்கள்.

கேஸ் சிலிண்டருன் சம்பந்தப்பட்ட நபரை குறித்த பகுதி மக்கள் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

டி.சந்ரு