கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் நீதிமன்றில் ஆஜர்

0
322

கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

மே 28ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின் நேற்று (03) பிற்பகல் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் தற்போது கோட்டை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சட்டத்தரணி ஜயந்த தெஹியத்தகே தெரிவித்தார்.

இதேவேளை, வணக்கத்திற்குரிய கொஸ்வத்தே மஹாநாம தேரரும் நேற்று பிற்பகல் கிருலப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here