கொடக்கவெல பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாகித்திய விழா கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நேற்று வரை கொடக்கவெல பிரதேச சபை கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.

மேற்படி சாகித்திய விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை(23) கொடக்கவெல பிரதேச சபை கட்டிடத் தொகுதியில் சிறுவர் நூலகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் நூலகத்தின் https://library.egps.lk இணையத்தளம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி சாகித்திய நிகழ்வை முன்னிட்டு புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை உட்பட சிறுவர்களுக்கான பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முதிதா சொய்சாää சப்ரகமுவ மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மஞ்சுலா இதிகாவெல, மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் பிரபாத் உதாகர, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னால் உறுப்பினர் அனுர அலகியவன்ன உட்பட அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரலானோர் கலந்து கொண்டனர்.

இரத்தினபுரி நிருபர்