நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கேம்பிரீஜ் கல்லூரிக்கு புதிய பஸ் ஒன்று கையளிக்கப்படவுள்ளது .

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் நிதியிலிருந்து நாடாளவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாடாசாலைக்கு ஒரு புதிய பஸ் வண்டி வழங்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கொட்டகலை கேம்பிரீஜ் கல்லூரிக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி பஸ் ஒன்று கையளிக்கப்படவுள்ளது.

கல்லூரி அதிபர் எ.நிக்கலஸ் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில், பிரதம அதிதியாக சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவர்களான பழனி திகாம்பரம் எம்.பி. வே.இராதாகிருஸ்ணன் எம்.பி,  உதயகுமார் எம்.பி,, வேலுகுமார் எம்.பி ,உட்பட நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

சிறந்த பெறுபேறுகள் , மற்றும் சகல பிரதேசங்களிலிருந்தும் மாணவர்களின் வருகை அடிப்படையிலே மேற்படி கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.