கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்தின் வேண்டுகோளுக்கிணங்க, கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட, நகரத்தில் உணவு பாதுகாப்பு திடீர் சோதனை நடவடிக்கையில், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியலயம் மற்றும் கொட்டகலை பிரதேச சபையினால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

இதில் கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்கள் என்போர் கலந்து கொண்டனர்.

இதன்போது முறையற்ற விதத்தில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கதக்க உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவ்வுணவு பொருட்கள் அழிக்கப்பட்டதுடன், அவ்வியாபார நிலையங்களுக்கு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறான திடீர் பரிசோதனைகள் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெறும் என்பதால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.