கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

0
270

கொழும்பு – 13, கொட்டாஞ்சேனையில் இடமட்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டாஞ்சேனை – ஹின்னி அப்புஹாமி சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கணவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கிம்புலா எல பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரே காயமடைந்துள்ளதாகவும் துப்பாக்கி மேற்கொள்ளப்பட்ட இடத்திலிருந்து இரண்டு வெற்றுத் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here