கொம்புடன் பிறந்த அதிசயக் குழந்தை

0
482

கால்களுக்குப் பதிலாக கொம்புடன் குழந்தையொன்று பிறந்த அதிசய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.  மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்பூர் மாவட்டத்தில் உள்ள மணிப்புரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 26 ஆம் திகதி அதிசயக்குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது.

இரு கால்கள் இல்லாமல் பிறந்த அந்த குழந்தை பெற்றோரை குழப்பத்தில் ஆழ்த்தியதுடன் மருத்துவர்களையும் குழப்பமடைய வைத்துள்ளது. கால்களுக்கு பதிலாக கொம்பு போன்ற அமைப்பு நீண்டு இருப்பதே இந்த குழப்பத்திற்கு காரணம் ஆகும்.

அந்த குழந்தை போதிய வளர்ச்சி அடையாமல் 1 கிலோ 400 கிராம் மட்டுமே எடை கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தை உடல்நிலையை கருத்தில் கொண்டு ஷிவ்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு குழந்தையை மாற்றியுள்ளனர். விசித்திரமான குறைபாட்டுடன் பிறந்த அக்குழந்தை சிறப்பு பராமரிப்பு பிரிவில் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கால்களுக்குப் பதிலாக கொம்பு போன்ற அமைப்புடன் பிறந்த அதிசயக் குழந்தை குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here