கொழும்பில் இருந்து பதுளைக்கு புதிய சொகுசு ரயில் சேவை இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இந்த வார இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மலையகத்தில் உள்ள பல சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய பாதையில் பயணிக்கும் புகையிரதத்தை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை ரயில்வே திணைக்களம் பூர்த்தி செய்துள்ளது. இதேவேளை சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதியே இவ்வாறான சேவை ஆரம்பிக்கப்டவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் குறித்த ரயில் இன்று அட்டன் ரயில் நிலையத்தின் ஊடாக பயணித்தது.

கொழும்பு-கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 05.30 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 3.55 மணிக்கு பதுளை நிலையத்தை சென்றடையும்.

கம்பஹா, வெயாங்கொட, பொல்கஹவெல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை, எல்ல மற்றும் பதுளை ஆகிய ரயில் நிலையங்களில் சொகுசு ரயில் நிறுத்தப்படும்.

இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து காலை 09.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 07.20 மணிக்கு கொழும்பு முதல் ரயில் நிலையத்தை சென்றடையும்.