கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைக்கு பஸ் வழங்கினார் சஜித்

0
305

சுமார் 3,250 பிள்ளைகள் கல்வி கற்கும் வசதி படைத்த தேசிய பாடசாலையான கொழும்பு பம்பலபிட்டி இந்து கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸாவினால் சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று பஸ் வண்டியொன்று வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

மேற்படி பஸ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட மனோ எம்.பி தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்,

‘சினமன் கார்டன்ஸ்’ மக்கள் மட்டும் வாழும் நகரம் அல்ல. இங்கேதான்இ மலையக, வடக்குஇ கிழக்கு பிரதேசங்களில் இருந்து குடிபெயர்ந்து கொழும்பில் வாழும், Urban Poor என்ற மாநகர பாமர மத்திய தரஇ குறை வருமான குடும்பங்கள் வாழ்கின்றன.

கிராம, தோட்ட பகுதிகளில் இருக்கும் நீர், நிலம்,  மரம், தாவரம் என்ற இயற்கை வசதிகள் கூட இங்கில்லை.

இந்த பின்தங்கிய குடும்ப பிள்ளைகள் பெருவாரியாக படிக்கும் அரசாங்க பாடசாலை இதுவாகும். இது தனியார் பாடசாலை அல்ல. சர்வதேச பாடசாலையும் அல்ல. தென் கொழும்பில் அமைந்திருதாலும் வட, தென், மத்திய, பொரளை மற்றும் வத்தளை, தெகிவளை, மொரட்டுவை மேலும் களுத்துறை மாவட்ட பிள்ளைகளும் இங்கே கல்வி பயில்கின்றனர். இதுபற்றிய விபரங்களை. அனைவரும் அறிய வேண்டும். எல்லா பாடசாலைகளுக்கும் ஒரே முறையில் இப்படி தர அரசாங்கத்தால் கூட முடியாது.

ஆனால் எதிரணி தலைவர் சஜித் பிரேமதாச இதுவரை 35 பாடசாலைகளுக்கு பஸ் வண்டிகளைஇ தந்துள்ளார். நாம் எமது ஒத்துழைப்பை அவருக்கு வழங்குகிறோம். இனிமேலும் இத்திட்டம் நாடு முழுக்க தொடரும். அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here