மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த வேனொன்றிலிருந்து 45 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கிரான்ட்பாஸ் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, ஊருகொடவத்தையில் வைத்து குறித்த வேனை மறித்து சோதனை மேற்கொண்டபோது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட குறித்த கேரளா கஞ்சா பொதிகள் கிராண்ட்பாஸ் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மன்னாரைச் சேர்ந்தவர்களே வேனில் வந்ததாகவும் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கிரான்ட்பாஸ் பொலிஸ்; போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

அஷ்ரப் சமட்