கொழும்பு – அவிசாவளை விதிக்கு பூட்டு

0
268

கொழும்பு – அவிசாவளை (லோ லெவல்) வீதியின், வெல்லம்பிட்டி சந்தியில் இருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையிலான பகுதி, இன்று  இரவு 10.00 மணி முதல் நாளை பிற்பகல் 5.00 வரை போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

தேசிய  நீர் வளங்கள் வலியாளர்கள் பொதுச் சபையின் மேற்பார்வையின் கீழ் கடுவெலவில் இருந்து ஒருகொடவத்தை வரை நிலக்கீழ் நீர்க் குழாய் பதித்தல் நடவடிக்கை காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த காலப்பகுதியில் போக்குவரத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு குடியிருப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதோடு, ஏனைய அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டிருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள், வெல்லம்பிட்டி சந்தியில் இருந்து கொலன்னாவை ஊடாக கொதட்டுவ, கொட்டிகாவத்தை சந்தி ஊடாக மீண்டும் அவிசாவளை வீதிக்கு வரமுடியும்.

அவிசாவளையிலிருந்து வரும் வாகனங்கள் கொட்டிகாவத்தை சந்தி ஊடாக கொதட்டுவ, கொலன்னாவை ஊடாக வெல்லம்பிட்டி சந்தியில் கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here