கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு தேசிய விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
இலங்கை தேசிய நீர் வடிகாலமைப்பு நடாத்திய அகில இலங்கை ரீதியிலான சிங்கள மொழி மூல நாடக போட்டியில் சிங்கள பாடசாலைகளுடன் போட்டியிட்ட தமிழ் பாடசாலையான கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி இறுதிச் சுற்றுக்கிற்கும் தெரிவாகியது.
இதற்கான கௌரவிப்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற திட்டமிட்டு பின்னர் நாட்டின் சீரற்ற தன்மை காரணமாக நீர் வடிகாலமைப்பின் தலைமைப்பீட கட்டடத்தொகுதி அரங்கில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் 31/03/2022 அன்று நடைபெற்ற போது எமது இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி தேசிய மட்டத்தில் இரண்டாவது இடத்தினை பெற்றுக்கொண்டது.
நேற்றைய தினம் எமது அரங்கில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு கல்லூரியில் அதிபர் தலைமையில் கௌரவிப்பு நடைபெற்றது.