கொழும்பு கோட்டை பகுதியின் பெஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 30வயது மதிக்கத்தக்க இளைஞன் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.