முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான அனுமதிக் காலம் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சிங்கப்பூர் ஊடகமான தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி மாலைதீவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ , 14 ஆம் திகதி அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதியை யுத்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யுமாறு அந்நாட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.