தெற்கு தாய்லாந்தில் 17 இடங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தீவைப்பு சம்பவங்களால் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தின் பாங்கொக்கில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளார்.

தாய்லாந்து சென்றடைந்தவுடன், கோட்டாபய ராஜபக்சவை அவரது தங்குமிடத்திலேயே இருக்குமாறும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.