கோட்டா – குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க ! கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

0
235

கோட்டபய ராஜபக்க்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு ஏதுவான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கோட்டபய ராஜபக்க்ஷ அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் பாதுகாப்பு மற்றும் சில சலுகைகளை பெறுவதற்கு உரித்துடையவர்.நாடு திரும்புவது குறித்து அவர் முன்வைக்கும் கோரிக்கைகளை பரிசீரலனை செய்து அவரதும் அவரின் குடும்பத்திரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

தாய்லாந்து நாட்டில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ மற்றும் அவரது குடும்பம் பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி அவருக்கு அரசாங்கம் பாதுகாப்பளிக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் சலுகைகள் கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதையும். சுட்டிக்காட்டியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here