‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காலக்கெடு

0
217

‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – காலி முகத்திடல் பகுதியில் அரசுக்கு அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கூடாரங்கள் மற்றும் பயிர் செய்கைகளை அகற்றிக் கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் பிறப்பித்துள்ளனர்.

எதிர்வரும் 5ம் திகதி மாலை 5 மணிக்கு முன்பதாக இந்த நடவடிக்கையை கட்டாயம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here