சபுகஸ்கந்த பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் களஞ்சியசாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில்  முற்றாக எரிந்து நாசமானது.   இன்று  இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது,  ஊழியர்கள் பணியில் இருந்தபோதும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களும் முற்றாக எரிந்து நாசமான நிலையில் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் இதுவரை தெரியவில்லை.

தீ பரவியதையடுத்து, சப்புகஸ்கந்த பொலிஸார், கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பியகம முதலீட்டுச் சபையின் தீயணைப்புப் பிரிவினர் உடனடியாக வந்து தீயை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுத்துள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.