சப்ரகமுவ மாகாண அரச சேவையாளர்கள் 75 பேருக்கு பதவி உயர்வு!

0
200

சப்ரகமுவ மாகாண அரச சேவையாளர்கள் 75 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய மேற்படி அரச சேவையாளர்களுக்கு பதவி உயர்வுக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வும் அவர்களுக்கு தெளிவுபடுத்தம் நிகழ்வும் நேற்று (4) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் சுனில் ஜயலத்

மாகாண அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் 11 பேரும் மற்றும் மாகாண அரச கனிஷ்ட சேவையாளர்கள் 64 பேரும் இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மேற்படி பதவி உயர்வு பெற்ற மாகாண அரச முகாமைத்துவ உதவியாளர்கள் 11 பேர் மாகாண அரச முகாமைத்துவத்தில் பரீட்சையில் சித்தி பெற்றே உயர் பதவிகளை பெற்றுள்ளனர்.

மேலும் மாகாண கனிஷ்ட பிரிவு உத்தியோகத்தர்கள் 64 பேர் மூன்றாம் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளன. இவர்களும் பரீட்சையில் சித்தி பெற்றே பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் மூலம் நடாத்தப்பட்ட பரீட்சையின் அடிப்படையிலேயே இவர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ,
அரச சேவையாளர்கள் என்ற ரீதியில் மக்களின் தேவைகளை சரியான முறையில் நிறைவேற்றி கொடுப்பதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற 1948ஆம் ஆண்டில் 83 பேருக்கு ஒரு அரச சேவையார் பணியாற்றியதுடன், 2022ஆம் அண்டில் 17 பேருக்கு ஒரு அரச சேவையாளர் என்ற ரீதியில் உயர்வடைந்துள்ளது.

நாம் அனைவரும் நாட்டுக்கு நன்மையை பெற்று கொடுப்பதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரத்தினபுரி நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here