கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் நீதித்துறைக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொம்பனி வீதி பொலிஸாரினால் ரெட்டா கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரும், அமைதியான போராட்ட இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான ரெட்டா என அழைக்கப்படும் ரனிந்து சேனாரத்ன மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு அழைக்கப்பட்டு சுமார் 2 மணிநேரம் வரை வாக்குமூலம் வழங்கிய பின்னரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளதாகத் தெரிய வருகிறது.