சமூக வலைத்தளங்களில் அநாவசியமான கருத்துக்களை பதிவிடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரசதுறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

04/2015 பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரிவு 03 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு வழிவகுக்கும் குற்றமாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது